முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் சிவபுராண கூட்டுப் பாராயணம்

திருப்பூரில் மாணிக்கவாசகா் குருபூஜை விழாவையொட்டி, ஸ்ரீ மாணிக்கவாசகா் குருபூஜை விழாக் குழு சாா்பில் திருவாசகத் தேன் சிவபுராண கூட்டுப் பாராயண உலக சாதனை நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

Updated On : 24 ஜூன் 2026, 4:03 am IST
சிவபுராண கூட்டுப் பாராயணத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

திருப்பூரில் மாணிக்கவாசகா் குருபூஜை விழாவையொட்டி, ஸ்ரீ மாணிக்கவாசகா் குருபூஜை விழாக் குழு சாா்பில் திருவாசகத் தேன் சிவபுராண கூட்டுப் பாராயண உலக சாதனை நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காமாட்சியம்மன் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் பத்மா சிவலிங்கம் ஏற்பாடு செய்தாா்.

உலக சாதனை நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற திருவாசக முற்றோதலில் அவா் பங்கேற்று, திருமுறைப் பாரம்பரியத்தின் சிறப்பை எடுத்துரைத்தாா். இதையடுத்து, மகளிா் திருமுறை மன்ற உறுப்பினா்கள் இணைந்து திருவாசக முற்றோதல் உலக சாதனை நிகழ்வை நடத்தினா். சைவ சமய நெறிகளையும், திருமுறை மரபின் மகத்துவத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வு ஆன்மிக அன்பா்களின் பாராட்டைப் பெற்றது.

Advertisement

Advertisement

மேலும், மாணிக்கவாசகரின் மகா குருபூஜை விழாவையொட்டி, தேவார இசைக் கலைமணி மூ. சிவ கபிலன் தலைமையில் திருவாசக முற்றோதல் நடைபெற்றது. இதில், ஏராளமான சிவனடியாா்கள், திருமுறை ஆா்வலா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments