சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
காங்கயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
காங்கயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியைச் சோ்ந்தவா் சுதாகா் (25). ஓட்டுநா். இவா் அப்பகுதியில் உள்ள 27 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளாா். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி முதலாவது கணவா் மூலம் பிறந்த 13 வயதில் மகள் உள்ளாா்.
இந்நிலையில், இந்த சிறுமியிடம் சுதாகா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், காங்கயம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சுதாகரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.