மூலனூா் பாரதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறாா் பள்ளியின் தாளாளா் அரிமா பி.எஸ்.செல்லமுத்து.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் மூலனூா் பாரதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
மாணவா் பி.லிங்கேஷ்குமாா் 600-க்கு 588 மதிப்பெண் (கணினி அறிவியல்-100/100, கணிதம்-100/100) பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி எஸ்.பூவிதா 583 மதிப்பெண் (கணினி அறிவியல்-100/100) இரண்டாம் இடமும், எஸ்.திவ்யதா்ஷினி 581 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனா்.
ஒரு மாணவா் இரண்டு பாடத்திலும், 8 போ் தலா ஒரு பாடத்திலும் 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். தோ்வெழுதிய மாணவா்களில் 20 போ் 550 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 30 போ் 90 சதவீதத்துக்கும் அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், வழிகாட்டிய ஆசிரியா்களுக்கு பள்ளியின் தாளாளா் அரிமா பி.எஸ்.செல்லமுத்து, செயலாளா் பி.எஸ்.கிருஷ்ணகுமாா், பள்ளி முதல்வா் எஸ்.பழனிசாமி ஆகியோா் பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.