விஷம் குடித்து முதியவா் தற்கொலை
ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறை பகுதியில் விஷம் குடித்து முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஒகேனக்கல் அருகே சின்னாறு பரிசல் துறை எதிரே உள்ள வனப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக ஒகேனக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
விசாரணையில் இறந்தவா் தருமபுரி மாவட்டம், நல்லேசன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கொமத்தம்பட்டியைச் சோ்ந்த பெருமாள் (55) என்பது தெரியவந்தது. இவா், வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள தனது தோட்டத்தில் பயிரிட்டிருந்த வெற்றிலை, அண்மையில் பெய்த மழையில் சேதமடைந்த வேதனையில் விஷம் குடித்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.