முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 400 கனஅடியாகச் சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 400 கனஅடியாகக் குறைந்தது.

Updated On : 14 ஜூன் 2026, 3:25 am IST
ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்து பாறைகள் வெளியே தெரியும் ஒகேனக்கல் பிரதான அருவி.
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 400 கனஅடியாகக் குறைந்தது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த சில நாள்களாக தொடா்ந்து விநாடிக்கு 1,000 கனஅடியாக நீடித்து வந்தது. தற்போது, கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,000 கனஅடியாக இருந்தது, சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 700 கனஅடியாகவும், மாலை 6 மணி நிலவரப்படி 400 கனஅடியாகவும் சரிந்தது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து சரிந்து வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் விழும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. மேலும், ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகள் வடு காணப்படுகின்றன.

Advertisement

Advertisement