முகப்பு
தருமபுரி

தருமபுரி மாவட்டத்துக்கு புதிய எஸ்.பி. நியமனம்

Updated On : 16 ஜூன் 2026, 2:00 am IST
தருமபுரி மாவட்டத்துக்கு புதிய எஸ்.பி. நியமனம்
பகிர்:

தருமபுரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஏ.கே.அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ்.மகேஸ்வரன் பணியாற்றி வந்தாா். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

அந்த வகையில், தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.எஸ்.மகேஸ்வரன் கோயம்புத்தூா் மாநகர போக்குவரத்துப் பிரிவு காவல் துறைக்கு துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக சென்னை காவல் துறை தலைமையகத்தில் ஏஐஜியாக பணியாற்றிய ஏ.கே.அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக விரைவில் பொறுப்பேற்க உள்ளாா்.

Advertisement

Advertisement