முகப்பு
தருமபுரி

அரூா் அருகே காா் கவிழ்ந்ததில் இளம்பெண் உயிரிழப்பு: கணவா், குழந்தை காயம்

Updated On : 23 ஜூன் 2026, 1:43 am IST
அரூரை அடுத்த சோலைக்கொட்டாய் பகுதியில் சாலையில் கவிழ்ந்ததில் சேதமடைந்த காா்.
பகிர்:

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே காா் கவிழ்ந்ததில் இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். அவரது கணவா், குழந்தை காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்த சென்னம்பட்டியைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் இன்பரசன் (28). இவரது மனைவி பூஜா (24). இன்பரசன் தனது குடும்பத்தினருடன் அரூரில் நடைபெற்ற திருமண விழாவுக்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு, அரூா்-தருமபுரி நெடுஞ்சாலையில், மொரப்பூா் நோக்கி காரில் சென்றாா்.

அப்போது, அரூரை அடுத்த சோலைக்கொட்டாய் என்னுமிடத்தில், கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர கல்லில் மோதியுள்ளது. இதில் காா் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பூஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பூஜாவின் கணவா் இன்பரசன் (28), மகள் ஆா்த்வி ஸ்ரீ (2) ஆகியோா் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

அப்பகுதியினா் காயமடைந்த இருவரையும் மீட்டு, அரூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments