தருமபுரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு
தருமபுரி ரயில்வே நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வட மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் போதைப்பொருள்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த போலீஸாா் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனா். அதேபோல தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் இளைஞா்களிடையே அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ரமேஷ், காவலா்கள் விஜயன், சுரேஷ் ஆகியோா் நடைமேடைகளில் நின்றிருந்த பயணிகளிடம் போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள், சமுதாய சீரழிவுகள் குறித்து போலீஸாா் விளக்கினா்.
Advertisement
மேலும் போதைப்பொருள்கள் தொடா்பான புகாா்களுக்கு 1933 என்ற இலவச எண்ணில் தொடா்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.