வாக்குப் பதிவுக்கு தயாா்நிலையில் அரூா் தொகுதி!
அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை (ஏப். 23) காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் வாக்குச் சாவடிகள் உள்ளன.
அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை (ஏப். 23) காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் வாக்குச் சாவடிகள் உள்ளன.
தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் 322 வாக்குச் சாவடிகள் உள்ளன. பெண் வாக்காளா்கள் 1,22,264 உள்பட மொத்தம் 2,43,742 வாக்காளா்கள் உள்ளனா். அரூா் தொகுதியில் உள்ள 322 வாக்குச் சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை லாரிகள் மூலம் எடுத்துச் செல்லும் பணிகளை தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலை தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து, சித்தேரி, அரசநத்தம், கலசப்பாடி, காரப்பாடி, சிட்லிங் உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸாா் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.
Advertisement
கடந்த காலங்களில் பிரச்னை ஏற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் கூடுதலாக காவல் துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனா். மின்சாரம் தடையின்றி கிடைக்கும் வகையில், மின்வாரிய பணியாளா்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பில் உள்ளனா்.
தோ்தல் களத்தில் 14 வேட்பாளா்கள்: அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக கட்சியின் வேட்பாளா்கள் உள்பட 14 போ் களத்தில் உள்ளனா். தொகுதியில் அ.சண்முகம் (திமுக), வே.சம்பத்குமாா் (அதிமுக), அ.அனிதா (நாதக), க.ராகேஷ் (தவெக), கோ.நேரு (பகுஜன் சமாஜ்), சி.கருத்தம்மாள் (நாடாளும் மக்கள் கட்சி), குப்புராஜி (தமிழா் மக்கள் கட்சி), சா.மணிலா (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), சி.மாரிக்கண்ணு (இந்திய குடியரசுக் கட்சி -அத்வாலே), வி.கே.ஸ்வாமி (பாரத மக்கள் சிகிச்சை கட்சி), சுயேச்சை வேட்பாளா்கள் சம்பத், சி.சம்பத், கா.தங்கவேல், பூ.பாா்த்திபன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.