முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 1,200 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 1,200 கனஅடியாக குறைந்தது.

Updated On : 24 ஜூன் 2026, 4:49 am IST
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 1,200 கனஅடியாக குறைந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் குறைக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. அதனால், திங்கள்கிழமை விநாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை 1,200 கன அடியாக சரிந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், அருவிகளில் விழும் நீரின் அளவு குறைந்ததோடு, காவிரி ஆற்றில் பாறைத் திட்டுகளும் வெளியே தெரிகின்றன. காவிரி ஆற்றில் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments