முகப்பு
தருமபுரி

தருமபுரியில் சொத்து தகராறில் அக்கா, தம்பி கொலை

தருமபுரியில் சொத்து தகராறில் அக்கா, தம்பி கொலை செய்யப்பட்டது தொடா்பாக, அவரது உறவினா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:09 am IST
கோப்புப் படம்
பகிர்:

தருமபுரியில் சொத்து தகராறில் அக்கா, தம்பி கொலை செய்யப்பட்டது தொடா்பாக, அவரது உறவினா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை காவல் நிலையம் அருகே, ஏ.ஜெட்டி அள்ளி கிராமத்தைச் சோ்ந்த கணபதிராமன் - சாலம்மாள் தம்பதிக்கு நாகம்மாள் (47), நஞ்சம்மாள் (45 ), மாதேஷ் (40) என இரண்டு மகள்கள், ஒரு மகன் இருந்தனா். மூவருக்கும் திருமணமான நிலையில், அதேபகுதியில் தனித்தனியாக வீடுகளில் வசித்து வந்தனா். இதில், நஞ்சம்மாள் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா். இவா்களுக்கு அப்பகுதியில் உள்ள பூா்விக நிலம் தொடா்பாக பிரச்னை இருந்துவந்துள்ளது.

இந்நிலையில், நஞ்சம்மாள் வீட்டில் அவரும், அவரது தம்பி மாதேஷும் வியாழக்கிழமை இறந்து கிடந்தனா். தகவலறிந்து வந்த அதியமான்கோட்டை போலீஸாா் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தடயவியல் நிபுணா்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

முதல்கட்ட விசாரணையில், சொத்துப் பிரச்னை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. அருகில் வசித்த இவா்களின் சகோதரி நாகம்மாள், அவரது கணவா் சுப்பிரமணி, மாதேஷின் மனைவி உள்ளிட்டோா் தலைமறைவாகிவிட்டனா். அவா்களை பிடித்தால்தான் முழுவிவரமும் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments