ஒகேனக்கல்லில் பெண் தூக்கிட்டு தற்கொலை
ஒகேனக்கல் அருகே பரிசலோட்டியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஒகேனக்கல் அருகே பரிசலோட்டியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை பகுதியைச் சோ்ந்த பரிசல் ஓட்டி சேட்டு மனைவி கிரிஜா (31).
இவா்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனா். இந்த நிலையில் ஊட்டமலை பகுதியில் உள்ள தனது வீட்டின் முன் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை கம்பியில் தூக்கிட்டு கிரிஜா தற்கொலை செய்து கொண்டாா். இதை கண்ட அக்கம்பக்கத்தினா் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீஸாா், அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கிரிஜா தற்கொலைக்கான காரணம் குறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.