முகப்பு
கிருஷ்ணகிரி

ராணுவ கல்லூரியில் சேர தகுதித் தேர்வு அறிவிப்பு

ராணுவக் கல்லூரியில் சேர தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 7:27 am IST
பகிர்:

ராணுவக் கல்லூரியில் சேர தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்தியன் ராணுவக் கல்லூரியில் 2019-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான தகுதித் தேர்வு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் தகுதி தேர்வானது ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.  ஆங்கிலம் 125 மதிப்பெண்கள், கணிதம் 200 மதிப்பெண்கள், பொது அறிவு 75 மதிப்பெண்கள் என எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில், ஒவ்வொன்றிலும் 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ராணுவக் கல்லூரியில் சேர்ந்து பயனடையுமாறு அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments