முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூன் 27 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

Updated On : 27 ஜூன் 2026, 11:26 am IST
பகிர்:
Updated On : 27 ஜூன் 2026, 11:26 am IST

நுங்கம்பாக்கம் இல்லத்தில் பாக்யராஜ் உடல்! அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது!

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடல், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உறவினர்கள், திரையுலகினர், மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

நாளை (ஜூன் 28) பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Updated On : 27 ஜூன் 2026, 11:26 am IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் சனிக்கிழமை காலை (ஜூன் 27) நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

Updated On : 27 ஜூன் 2026, 11:26 am IST

ஜூன் 27 தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

ஆபரணத் தங்கத்தின் விலை, சனிக்கிழமை (ஜூன் 27) காலை பவுனுக்கு ரூ.560 உயா்ந்து, ரூ.1,06,960-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.45 லட்சத்துக்கும் இன்று விற்பனையாகிறது.

Updated On : 27 ஜூன் 2026, 11:26 am IST

இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவுக்கு தமிழக ஆளுநர் இரங்கல்!

"தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு இயக்குநர் கே. பாக்யராஜ் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது" என தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் இரங்கல்

Updated On : 27 ஜூன் 2026, 11:26 am IST

பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜுக்கு கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இன்று (ஜூன் 27) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments