FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி!

மறைந்த இசையமைப்பாளர் தேவா உடலுக்கு நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்....

17 அக்டோபர் 2026, 3:44 pm IST
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி... - X
பகிர்:

மறைந்த இசையமைப்பாளர் தேவா உடலுக்கு நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (75), மாரடைப்பு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (அக். 17) காலமானார்.

தேவாவின் மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலரும் நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் செய்தியில்,

"அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது. அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும்" என்று பதிவிட்டிருந்தார்.

summary

Kamal Haasan pays tribute to Deva mortal remains

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments