FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கருப்பு உடையில் வந்தார்! தேவாவுக்கு ரஜினி நேரில் அஞ்சலி!

மறைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கு ரஜினி அஞ்சலி செலுத்தினார்.

10 வினாடிகள் முன்பு
பாட்ஷா படத்தின் போது எடுக்கப்பட்ட படம் - DPS
பகிர்:

மறைந்த இசையமைப்பாளர் தேவா உடல் சென்னை, தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நடிகர் ரஜினி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

இசையமைப்பாளர் தேவா தேவாவின் மறைவு குறித்து தகவல் அறிந்ததும், ஏராளமான திரையுலகினர், தேவாவின் இல்லத்தில் குவிந்தனர்.

கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து தேவாவின் உடல் அவரது இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேவா உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினி, தேவா இல்லத்துக்கு வந்தார்.

கருப்பு உடையில் வந்த ரஜினி, தேவாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்த இசையமைப்பாளர் தேவாவின் தியாகராயநகர் இல்லத்தில் அவரது ரசிகர்களும், முக்கிய தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் மாங்காடு பகுதியில் இறுதி சடங்குகள் நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments