இசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு
மறைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு....
மறைந்த இசையமைப்பாளர் தேவா இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (75), மாரடைப்பு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (அக். 17) காலமானார்.
தேவாவின் மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலரும் நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு இறுதிச் சடங்கின்போது அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அவர் இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு அரசு மரியாதை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN govt honors for music composer Deva
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.