முகப்பு
கிருஷ்ணகிரி

அரசு மருத்துவமனையில் கட்டுமான பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

தேன்கனிக்கோட்டை அருகே அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியில் நடைபெற்று வரும்  கட்டடம் கட்டுமானப் பணிகளை தளி எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 

Updated On : 18 ஏப்ரல் 2018, 7:49 am IST
பகிர்:

தேன்கனிக்கோட்டை அருகே அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியில் நடைபெற்று வரும்  கட்டடம் கட்டுமானப் பணிகளை தளி எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் தாய் சேய் மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதே போல பொதுமக்கள் பாதுகாப்பு அறை கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன. 
அதை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலரும், தளி எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் பார்வையிட்டு பணிகள் குறித்து அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார். அப்போது தேன்கனிக்கோட்டை பேரூர் செயலர் சீனிவாசன் சக்திவேல், ராஜா மற்றும் தி.மு.க.வினர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.