முகப்பு
கிருஷ்ணகிரி

சிறுதொழில் நிறுவனங்களின் கோரிக்கை: ஜி.எஸ்.டி. கவுன்சில் நிராகரிப்பு

தமிழக சிறுதொழில் முனைவோரின் கோரிக்கைகள், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது

Updated On : 25 டிசம்பர் 2018, 8:40 am IST
பகிர்:

தமிழக சிறுதொழில் முனைவோரின் கோரிக்கைகள், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது என ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய  நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடந்த 31-ஆவது  ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக சிறுதொழில்  முனைவோர்களின் பிரதான கோரிக்கைகளான லேபர் சார்ஜ் செய்பவர்களின் தற்போதைய 18 சதவீத வரியிலிருந்து  முழுவதும் விலக்கு  கோரப்பட்டது. ஏனெனில் சுய தொழில் முனைவோரின்  தொடக்கமே லேபர் சார்ஜ் தொழில்தான். அடுத்து  தமிழகம் முன்னிலை வகிக்கும் ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள் உற்பத்தித் துறையில் லட்சக்கணக்கான சிறு மற்றும் குறுந்தொழில்கள் நிறுவனங்கள் பொருள்களை உற்பத்தி செய்து  பெருநிறுவனங்களுக்கு சப்ளை செய்கின்றன. இடைநிலை உற்பத்தியாளர்களான சிறு தொழில் நிறுவனங்கள் 18 சதவீத வரியில்  மூலப்பொருள்களை வாங்கி  இடைநிலை நிறுவனங்கள் உதிரி பாகங்களாக உற்பத்தி செய்து 28 சதவீத வரி செலுத்தி பெரு நிறுவனங்களுக்கு மூன்றிலிருந்து ஆறு மாத கால  கடனில்  பொருள்களை சப்ளை செய்ய வேண்டிய நிலையில் சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த 10 சதவீத கூடுதல்  வரியை  உடனடியாகக் கட்டமுடியாத சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.ஏற்கெனவே இத்துறையில் உள்ள பெருமளவு நிறுவனங்கள் அரசுக்கு வரிகட்ட முடியாமல் நலிவடைந்து வருகின்றன. எனவே உடனடியாக வாகன உதிரிபாக இடைநிலை பொருள்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியிலிருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றார்.
அப்போது ஹோஸ்டியா சங்கத்தின் செயலாளர் வடிவேலு, பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments