கிருஷ்ணகிரி பாண்டுரங்க ருக்மணி சுவாமி கோயில் பிரமோத்ஸவ விழா
கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ பாண்டுரங்க ருக்மணி சுவாமி கோயில் பிரமோத்ஸவ விழா திங்கள்கிழமை (ஜூலை 23)தொடங்குகிறது.
கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ பாண்டுரங்க ருக்மணி சுவாமி கோயில் பிரமோத்ஸவ விழா திங்கள்கிழமை (ஜூலை 23)தொடங்குகிறது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள அக்ரஹாரம் சிவாஜி நகரில் உள்ள ஸ்ரீ பாண்டுரங்க ருக்மணி சுவாமி கோயில் 82-ஆவது ஆண்டு சப்தா பிரமோத்ஸவ விழாவையொட்டி திங்கள்கிழமை காலை கணபதி ஹோமம், நவக்கிர பூஜை, ஸ்ரீ விட்டல் ரகுமாயி, ஸ்ரீ அம்பா பவானி அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாலை 7 மணிக்கு ஸ்ரீ விட்டல் ரகுமாயி உற்சவ மூர்த்தி கிராம ஊர்வலம் நடைபெறுகிறது.
ஜூலை 24 முதல் 26-ஆம் தேதி வரை காலை 10 மணிக்கு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ விட்டல் ரகுமாயி, ஸ்ரீ அம்பா பவானி அபிஷேக பூஜைகள் நடைபெறுகின்றன. 27-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அம்பா பவானி தேவிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10 மணிக்கு விநாயகர், ஸ்ரீ விட்டல் ரகுமாயி அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஜூலை 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீ ருக்மணி திருக்கல்யாணம், மாலை 5 மணிக்கு சிறப்பு அலங்கார தேரில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ விட்டல் ரகுமாயி, ஸ்ரீ அம்பா பவானி உற்சவ மூர்த்திகள் நகர் வலம் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி காலை ஸ்ரீ அம்பா பவானி அபிஷேக ஆராதனையும், மாலை 5 மணிக்கு வசந்த உற்சவமும் நடைபெறுகிறது.
விழாவையொட்டி தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.