ஊத்தங்கரை ஒன்றியத்தில் ரூ.6.15 கோடியில் திட்டப் பணிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ் அண்மையில் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் ஏ.சி.தேவேந்திரன் தலைமை வகித்தார். ஊத்தங்கரை பேரூராட்சியில் சேலம் முக்கியச் சாலை கணேசா திரையரங்கு முதல் அம்பேத்கர் நகர் வரை வடிகால் அமைத்தல் பணிக்கு ரூ.99 லட்சம், துரிஞ்சிப்பட்டி தார்ச் சாலை பணிக்கு ரூ.40 லட்சம், பெரிய தள்ளபாடி தார்ச் சாலை பணிக்கு ரூ.56 லட்சம், ரெட்டி வலசை தார்ச் சாலை பணிக்கு ரூ.20 லட்சம், நடுப்பட்டி தார்ச் சாலை பணிக்கு ரூ.53 லட்சம், தீர்த்தகிரி வலசை தார்ச் சாலை பணிக்கு ரூ.90 லட்சம், பாவக்கல் தார்ச் சாலை பணிக்கு ரூ.34 லட்சம், கீழ்குப்பம் தார்ச் சாலை பணிக்கு ரூ.96 லட்சம், பூசம்பட்டி தார்ச் சாலை பணிக்கு ரூ.60 லட்சம், புதூர் புங்கனை தார்ச் சாலை பணிக்கு ரூ.40 லட்சம், மேட்டுத்தாங்கல் தார்ச் சாலை பணிக்கு ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.6 கோடியே 15 லட்சத்திலான பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி, நகரச் செயலர் பி.கே.சிவானந்தம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி செயலர் வேங்கன், ஒன்றியப் பொருளாளர் சேட்டுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.