பர்கூரில் இன்று அகில இந்திய வாலிபால் போட்டி
பர்கூரில் 14-ஆவது அகில இந்திய அளவிலான வாலிபால் போட்டி பிப்.25-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகின்றன.
பர்கூரில் 14-ஆவது அகில இந்திய அளவிலான வாலிபால் போட்டி பிப்.25-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதாநத்தில் பர்கூர் கைப்பந்து கழகம் சார்பில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. பிப்.25-ஆம் தேதி மாலை 6 மணி அளவில் தொடங்கும் இப் போட்டிகள் மார்ச் 4-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
மின்னொளியில் 8 நாள்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை இந்தியன் வங்கி அணி, சென்னை ஐசிஎப் அணி, ஹரியாணா அணி, புதுதில்லி ரயில்வே அணி, கேரள கொச்சி பிபிசிஎல் அணி, ஆல் இந்தியா கஸ்டம்ஸ் அணி, கர்நாடக போஸ்டல் அணிகள் பங்கேற்கின்றன.
பெண்கள் பிரிவில் கேரள கேஎஸ்இஇ அணி, தில்லி இந்தியன் ரயில்வே அணி, கேரளா போலீஸ் அணி, சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி, மகாராஷ்டிர அணி, தில்லி சி.ஆர்.பி.எப். அணி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.