முகப்பு
சிறுவர்மணி

கோடை மழையே வா!

கோடை மழையே கோடை மழையே கொஞ்சம் பெய்துவிடு!

Updated On : 31 மே 2026, 1:38 pm IST
பகிர்:

கோடை மழையே கோடை மழையே

கொஞ்சம் பெய்துவிடு!

ஆடை நனைய வியர்க்கும் சூட்டை

Advertisement

Advertisement

அன்பாய்த் தணித்துவிடு!

ஓடை வழியே உனது நீரைச்

சற்றே ஓடவிடு!

ஆடிக் கொண்டே எமது கப்பல்

அதில் போகவிடு!

செடிகள் எல்லாம் செழிப்பாகத் தோன்றும்

உனது உணவாலே!

விடுமுறைப் பயணமும் இனிமை யாகும்

உனது வரவாலே!

-எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், மூவரசன்பேட்டை.

வகுப்பறை அலப்பறை...

'பரீட்சையில் அவன் பாஸ் செய்துவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாயா?''

'ஆமாம்... அவனைப் பார்த்துதானே காப்பி அடித்தேன்.''

-மஞ்சுதேவன், பெங்களூரு.

'பிளஸ் 2 பரீட்சை தேர்வில் முறைகேடு நடந்துருக்குடா?''

'எப்படிச் சொல்றே?''

'என்னைப் பார்த்து 'காப்பி' அடிச்சவன் பாசாயிட்டேன். நான் பெயில் ஆயிட்டேன்.''

-இந்து குமரப்பன், விழுப்புரம்.

'புட் பால், டென்னிûஸ எல்லாம் விளையாடணும்னு ட்ரில் மாஸ்டர் சொன்னாரே?''

'அதைத்தான்டா... மொபைலில் நான் விளையாடிட்டி இருக்கேன்...''

-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.