முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் ஆலங்கட்டியுடன் பலத்த மழை

கிருஷ்ணகிரியில் ஆலங்கட்டியுடன் பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆலங்கட்டி மழை.
பகிர்:

கிருஷ்ணகிரியில் ஆலங்கட்டியுடன் பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல் ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

கிருஷ்ணகிரி மற்றும் கந்திகுப்பம் பகுதிகளிலும் ஆலங்கட்டி மழை பெய்தது. சிறுவர்கள், ஆலங்கட்டிகளை சேகரித்து விளையாடி மகிழ்ந்தனர். சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

திடீர் மழையால் வெயிலின் தாக்கம் தணிந்து குளுமையான சூழல் நிலவுகிறது.

இதனால், பெண்கள் குழந்தைகள் , முதியவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மின்சார விநியோகத்தை சீர்படுத்தும் பணியில் மின்வாரு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

summary

People were happy with the heavy rains and hailstorms in Krishnagiri.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.