கிருஷ்ணகிரி அருகே வறண்ட கிணற்றில் தவறி விழுந்த 4 புள்ளி மான்கள் மீட்பு
கிருஷ்ணகிரி அருகே வறண்ட கிணற்றில் தவறி விழுந்த 4 புள்ளி மான்கள் மீட்கப்பட்டன.
கிருஷ்ணகிரி அருகே வறண்ட கிணற்றில் தவறி விழுந்த 4 புள்ளி மான்கள் மீட்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் யானை, கரடி, புள்ளிமான், எறும்புத்தின்னி, உடும்பு, சிறுத்தை போன்ற பல வன விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களில் புகுவது வழக்கம்.
இதையும் படிக்க- கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
Advertisement
Advertisement
இந்த நிலையில் கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் உட்பட்ட தொகரப்பள்ளி காப்புக் காட்டில் இருந்து வெளியேறிய 4 புள்ளி மான்கள் ராமசாமி என்பவரின் 50 அடி ஆழ விவசாய வறண்ட கிணற்றில் விழுந்துள்ளது.
தகவலறிந்த கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி புள்ளி மான்களை உயிருடன் மீட்டு காப்புக் காட்டில் விடுவித்தனர்.