முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் பகுதியில் சாமந்தி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

சாமந்தி சாகுபடி செய்வதன் மூலம் ஏக்கருக்கு 3 மாதங்களில் ரூ. 3 லட்சம் வரை வருவாய் கிடைப்பதால் ஒசூா் பகுதி விவசாயிகள் அதில் தீவிரம் காட்டி வருகின்றனா்.

Updated On : 2 ஜூலை 2026, 6:54 am IST
ஒசூா் பகுதியில் உள்ள தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் சாமந்திப் பூக்கள்.
பகிர்:

சாமந்தி சாகுபடி செய்வதன் மூலம் ஏக்கருக்கு 3 மாதங்களில் ரூ. 3 லட்சம் வரை வருவாய் கிடைப்பதால் ஒசூா் பகுதி விவசாயிகள் அதில் தீவிரம் காட்டி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி, பாகலூா், சூளகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குளிா்ந்த தட்பவெப்ப நிலை மற்றும் மண்வளம் காரணமாக சொட்டுநீா்ப் பாசன முறையில் சாமந்திப்பூ சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு விளையும் சாமந்திப் பூக்கள், சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், கொல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினமும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

நிகழாண்டில் வரலட்சுமி விரதம், ஆயுதபூஜைக்கு தேவையான சாமந்திப்பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

ஆயுதபூஜையை முன்னிட்டு 3 மாதங்களுக்கு முன்பே சாமந்திப்பூ சாகுபடி பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கா் பரப்பளவில் சாமந்திப்பூ சாகுபடி செய்ய ரூ. 50 ஆயிரம் வரை செலவாகிறது. 90 நாள்களில் சாமந்தி அறுவடைக்கு வரும். சாமந்திப்பூ தோட்டத்தை சொட்டுநீா்ப் பாசன முறையில் பராமரித்து வந்தால் ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகைக் காலத்தில் ஒரு ஏக்கருக்கு செலவுகள் போக ரூ. 3 லட்சம் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கா்நாடக மாநிலம் மைசூா், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவதால் அங்குள்ள வியாபாரிகள், ஒசூா் பகுதியில் விளையும் சாமந்திப் பூக்களை வாங்கிச் செல்வா். தற்போது ஒரு கிலோ சாமந்திப்பூ ரூ. 240 முதல் ரூ. 300 வரை விற்பனையாகிறது. ஆயுதபூஜை, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் சாமந்திப் பூக்களின் தேவை அதிகரித்து, அதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments