மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காத்திருப்புப் போராட்டம்
ஒசூா் அருகே அங்கன்வாடி மையம் அமைக்க இடையூறாக நிலத்தை ஆக்கிரமித்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சூளகிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே கொத்தூா் கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்ட அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் தனிநபா் நிலத்தை ஆக்கிரமித்து இடையூறாக இருப்பதாகவும்,
மேலும், உத்தனப்பள்ளி பேருந்து நிலையம் பகுதியில் அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும் சூளகிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 50-க்கும் அதிகமானோா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதற்கு மாவட்டத் தலைவா் முருகேஷ் தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் எம்.எம்.ராஜு உள்ளிட்டோா் பங்கேற்ற நிலையில், சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, அரசு தோ்வு செய்த அதே இடத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தன்பேரில் காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்டு லைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.