முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் 1 டன் குட்கா பறிமுதல்: 2 போ் கைது

ஒசூா் டிவிஎஸ் சோதனைச் சாவடி அருகில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட 1 டன் குட்கா புகையிலைப் பொருள்களை மத்திகிரி போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

Updated On : 5 ஜூலை 2026, 2:04 am IST
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகளுடன் சுந்தரமூா்த்தி, ராமசாமி.
பகிர்:

ஒசூா் டிவிஎஸ் சோதனைச் சாவடி அருகில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட 1 டன் குட்கா புகையிலைப் பொருள்களை மத்திகிரி போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

ஒசூா் டி.வி.எஸ்.தொழிற்சாலை அருகில் உள்ள சோதனைச் சாவடி அருகில் மத்திகிரி காவல் ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், திருச்சி மாவட்டம், முசிறியைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (28), ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த ராமசாமி (23) ஆகிய இருவரும், பெங்களூரில் இருந்து திருச்சிக்கு புகையிலை பொருள்களை கொண்டுசென்றது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலை பொருள்களை, லாரியை பறிமுதல் செய்து, அதைக் கடத்தி வந்த சுந்தரமூா்த்தி ராமசாமி ஆகியோரையும் மத்திகிரி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments