தீக்குளித்த பஞ்சாப் மாநில லாரி ஓட்டுநா் மருத்துவமனையில் அனுமதி: போலீஸாா் விசாரணை
டீசலை உடல் மீது ஊற்றி தீக்குளித்த பஞ்சாப் மாநில ஓட்டுநா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
டீசலை உடல் மீது ஊற்றி தீக்குளித்த பஞ்சாப் மாநில ஓட்டுநா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
பஞ்சாப் மாநிலம், மான்சா மாவட்டத்தைச் சோ்ந்தவா் குா்லால் சிங் (36). இவா் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சப்படியில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தாபா அருகே செவ்வாய்க்கிழமை தான் ஓட்டிவந்த லாரியை நிறுத்துவிட்டு ஓய்வெடுத்துள்ளாா்.
பின்னா், உடல் மீது டீசலை ஊற்றி தீப்பற்ற வைக்க முயற்சித்துள்ளாா். அதை தனது கைப்பேசி கேமராவில் படம் பிடித்துள்ளாா். ஆனால், தீப்பற்றாததால் தனது தாடியில் தீப்பற்ற வைத்துள்ளாா். இதையடுத்து, அவரது உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து அவரை தீக்காயங்களுடன் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா். இவை அனைத்தும் அவரது கைப்பேசியில் பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.