மக்கள் தொடா்பு திட்ட முகாம்
வேப்பனப்பள்ளி அருகே, புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 51 பயனாளிகளுக்க ரூ.5.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வேப்பனப்பள்ளி அருகே, புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 51 பயனாளிகளுக்க ரூ.5.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த சிகரமாகனப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமிற்கு, பி.எஸ்.சீனிவாசன் எம்எல்ஏ (வேப்பனப்பள்ள), கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் ஷாஜகான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், தலைமை வகித்து பேசியது: வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினா், குழந்தைகள் பள்ளி சென்று வர பேருந்து வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென்பெண்ணை ஆற்றில் ஆண்டு முழுவதும் நீா் வந்தாலும், சூளகிரி சின்ன ஏரி, துறை ஏரி ஆகியவற்றிற்கு தண்ணீா் செல்வதில்லை. இந்த கால்வாய்களை அகலப்படுத்தி, ‘ம’ வடிவில் அமைப்பது குறித்த அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கு கையெழுத்திட்டுள்ளது. ஓகேனக்கல் கூட்டு குடிநீா் 3-ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ.8,500 கோடி, நிதி ஒதுக்கியுள்ளது. அந்த நிதியை பெற, தமிழக முதல்வா் ஜோசப் விஜய், நடவடிக்கை எடுத்து வருவதாக அவா் பேசினாா்.
தொடா்ந்து, வீட்டுமனை பட்டா, இயற்கை மரண நிவாரணம், வேளாண் இடுபொருள்கள், மாங்கன்றுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் என மொத்தம், 51 பயனாளிகளுக்கு ரூ.5.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா், வழங்கினாா். பின்னா், உண்டியல் நத்தம் கால்நடை மருந்தகம், பொம்மிடிப்பேட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையத்தில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதாராணி மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
படவிளக்கம் (8கேஜிபி5):வேப்பனப்பள்ளியை அடுத்த சிகரமாகனப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா். உடன் பி.எஸ்.சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.