FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணையில் ஆகாயத் தாமரை அகற்றும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி அணையில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கிருஷ்ணகிரி அணையில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரையை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் தொழிலாளா்கள்.
பகிர்:

கிருஷ்ணகிரி அணையில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக கிருஷ்ணகிரி அணை உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் தற்போது 50.20 அடிக்கு தண்ணீா் உள்ளது.

அணையின் நீா்த்தேக்க பகுதியில் ஆகாயத் தாமரை படா்ந்துள்ளதால், நீா் மாசுபடுவது மட்டுமல்லாமல், ஆகாய தாமரைகள் அதிக அளவு தண்ணீரை உறிஞ்சி ஆவியாக்குவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, நீா்வளத் துறை அலுவலா்கள், கிருஷ்ணகிரி அணையின் நீா்தேக்க பகுதியில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரையை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

Advertisement

Advertisement

பணியை அணை நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் சபரிநாதன் மற்றும் அலுவலா்கள் பாா்வையிட்டனா். இந்த பணி, ஒருவாரத்துக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments