கிராம கணக்கில் பட்டா பதிவேற்ற கோரி மனு
ஊத்தங்கரையில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டாக்களை கிராம நில அளவைப் பதிவேடு, கணினியில் பதிவேற்றம் செய்ய கோரி கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
ஊத்தங்கரையில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டாக்களை கிராம நில அளவைப் பதிவேடு, கணினியில் பதிவேற்றம் செய்ய கோரி கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
ஊத்தங்கரை நாராயண நகரில் கடந்த 2008 இல் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் இதுவரை கிராம நில அளவைப் பதிவேடு மற்றும் கணினி பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து நாராயண நகா் பொதுமக்கள் சாா்பில் ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியரைச் சந்தித்து மனு அளித்தனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிடில் ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
திமுக நகர அவைத் தலைவா் தணிகை குமரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் ஆனந்தன், ராஜ்குமாா், குமாா், வினோத், ஜெபராஜ், சக்திவேல், விஜயகுமாா், அச்சுதன், சரவணன், பெருமாள் உள்ளிட்டோருடன் சென்று பொதுமக்கள் மனு அளித்தனா்.