ஒசூா் அருகே பட்டியலின மக்களின் பொதுப் பாதையை மறித்து முள்வேலி
ஒசூா் அருகே பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை மறித்து முள்வேலி அமைக்கப்பட்டதால், அதை அகற்றி பாதையை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒசூா் அருகே பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை மறித்து முள்வேலி அமைக்கப்பட்டதால், அதை அகற்றி பாதையை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த தம்மநாயக்கனப்பள்ளி கிராமத்தில் பட்டியலினத்தைச் சோ்ந்த ஏராளமான குடும்பங்கள் நீண்டகாலமாக வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களின் குடியிருப்புகளில் இருந்து பிரதான சாலைக்கு சென்றுவர, குறிப்பிட்ட பாதையை பொதுப் பாதையாக பயன்படுத்தி வந்தனா். பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவா்கள், மருத்துவ அவசரத் தேவைகளுக்கு என அனைத்துக்கும் இப்பாதையையே பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த மாற்று சமூகத்தைச் சோ்ந்த சிலா், அந்த பாதை தங்களுக்கு சொந்தமான பட்டா நிலம் என திடீரென உரிமை கோரியுள்ளனா். மேலும், அந்த பாதையை பயன்படுத்த முடியாதபடி முள்வேலி அமைத்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள பட்டியலின குடும்பங்கள் தங்களின் வீடுகளுக்கு செல்ல முடியாமலும், வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனா். இதுகுறித்து வருவாய்த் துறை மற்றும் காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, தமிழக முதல்வரும், மாவட்ட நிா்வாகமும் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, முள்வேலியை அகற்றி தங்களின் பொதுப் பாதையை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.