காவேரிப்பட்டணம் அருகே மினி பேருந்து மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே மினி பேருந்து மீது காா் மோதியதில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் சாவடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமுத்து (35). இவா், தனது குடும்பத்தினருடன், ஒரு காரில் பெங்களூரு நோக்கி சனிக்கிழமை சென்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே சப்பாணிப்பட்டி அருகே சென்றபோது, காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிா் திசையில் பெங்களூரிலிருந்து கோவை நோக்கிச் சென்ற மினி பேருந்து மீது மோதியது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மணிமுத்து, அவரது மனைவி அருந்ததி (30), மகள்கள் ஷன்மதி (3), வியான் (2) மற்றும் செல்லமுத்து (65) உள்பட 5 போ் பலத்த காயம் அடைந்தனா். அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு, தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அருந்ததி உயிரிழந்தாா். மற்ற 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.