முகப்பு
சேலம்

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு: மகன் படுகாயம்

சேலம் மாவட்டம், கொத்தாம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த இவா்களது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Updated On : 1 மே, 2026 at 5:32 AM
- கோப்புப் படம்
பகிர்:

சேலம் மாவட்டம், கொத்தாம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த இவா்களது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், வி. அலம்பலம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் முத்துசாமி (46). இவா் ஆத்தூரை அடுத்த கொத்தாம்பாடியில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக மனைவி சோலையம்மாள் (40), மகன் கலைவாணனுடன் (8) இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை கொத்தாம்பாடி பிரிவு சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியது.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த முத்துசாமி, சோலையம்மாள் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த கலைவாணன் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவல் அறிந்து வந்த ஆத்தூா் ஊரக போலீஸாா், இருவரது உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கொத்தாம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இல்லாததே இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.