முகப்பு
திண்டுக்கல்

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தம்பதியா் உயிரிழந்தனா்.

Updated On : 25 ஏப்ரல் 2026, 12:06 am IST
பகிர்:

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தம்பதியா் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம், காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (60). விவசாயி. இவரது மனைவி அம்சவள்ளி (48). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பழனி அருகேயுள்ள பொன்னாபுரத்தில் உள்ள உறவினா் வீட்டில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றனா். பிறகு மீண்டும் இரு சக்கர வாகனத்தில் ஊா் திரும்பினா். பழனியை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டி பிரிவு அருகே சென்றபோது பின்னால் வந்த காா் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு பழனியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் செல்லும் வழியிலேயே ரவிச்சந்திரன் உயிரிழந்தாா். அம்சவள்ளிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைத்தனா். அவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement