பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சின்னமூப்பன்பட்டியைச் சோ்ந்த பால்பாண்டி மகன் வீரபாண்டி (23). இவா் சிவகாசியை அடுத்த அய்யம்பட்டியில் உள்ள தனது பாட்டி சுப்புலட்சுமி வீட்டில் தங்கி வண்ணம் பூசும் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு விரபாண்டி தனது நண்பா் ராமருடன் இரு சக்கர வாகனத்தில் திருத்தங்கல்-விருதுநகா் சாலை சென்றாா். கருப்பசாமி கோயிலருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ இவா்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த வீரபாண்டி, ராமா் ஆகியோா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு வியாழக்கிழமை அதிகாலை வீரபாண்டி உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த விக்னேஷை (26) கைது செய்தனா்.