எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
நாமக்கல்லில் அதிமுகவினர் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 31-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல்லில் அதிமுகவினர் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 31-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல் செல்லம்ப கவுண்டர் பூங்கா முன்பு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மயில் சுந்தரம், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பரமத்திவேலூரில்...
பாண்டமங்கலத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் அமைதி ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊர்வலம் பாண்டமங்கலத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று எம்.ஜி.ஆர். சிலை அருகே நிறைவு பெற்றது.
அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஊர்வலத்தில் நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் முத்துசாமி, நாமக்கல் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார், கபிலர் மலை ஒன்றியச் செயலாளர் ரவி, பாண்டமங்கலம் நகரச் செயலாளர் செல்வராஜ்,வெங்கரை நகரச் செயலாளர் ரவீந்திரன் மற்றும் அ.தி.மு.க-வை சேர்ந்த தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.