முகப்பு
நாமக்கல்

முட்டை விலையில் மாற்றமில்லை

Updated On : 23 ஆகஸ்ட் 2024, 2:42 am IST
பகிர்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.40-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பண்ணையாளா்களிடம் முட்டை விலை நிலவரம் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் முட்டை விலையில் மாற்றம் இல்லாததால், இங்கும் மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ.4.40-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 103-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 97 ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement