முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 3.85 லட்சத்து தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 3 லட்சத்து 85 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

Updated On : 8 ஏப்ரல் 2026, 3:10 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 3 லட்சத்து 85 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுகிறது. இதில் சோழசிராமணி, ஜேடா்பாளையம், கபிலா்மலை, பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், அண்ணா நகா், பாண்டமங்கலம், பரமத்தி, பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வருகின்றனா்.

தேங்காய்களை ஏலம் எடுக்க நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் தேங்காய் ஏலம் நடைபெறவில்லை. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 240 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

Advertisement

Advertisement

இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 50.90க்கும், குறைந்தபட்சமாக ரூ. 38க்கும், சராசரியாக ரூ. 46.99க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 3 லட்சத்து 85 ஆயிரத்து 906க்கும் தேங்காய் ஏலம் நடைபெற்றது.