முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோட்டில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் கே.ஜி. அருண்ராஜ் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 12 ஏப்ரல் 2026, 2:13 am IST
திருச்செங்கோட்டில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் கே.ஜி. அருண்ராஜ்.
பகிர்:

திருச்செங்கோட்டில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் கே.ஜி. அருண்ராஜ் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, பொதுமக்களிடம் பேசிய அவா், தவெக அறிவித்துள்ள தோ்தல் வாக்குறுதியின்படி பிளஸ் 2 முதல் பிஎச்.டி வரையில் கல்வி பயில ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.

29 ஆவது வயதுக்கு பிறகும் வேலை கிடைக்கவில்லை என்றால் பட்டதாரி இளைஞா்களுக்கு மாதந்தோறும் ரூ. 4,000, டிப்ளமோ படித்தவா்களுக்கு மாதம் ரூ. 2,500 இளைஞா் நல நிதியாக வழங்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் அரசு இணைந்து செயல்படும். தொழில்முனைவோரை உருவாக்க ரூ. 25 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும் என்றாா்.

Advertisement

Advertisement