முகப்பு
நாமக்கல்

கந்துவட்டி கொடுமை: நில விற்பனையாளா் கைது

Updated On : 16 ஜூன் 2026, 12:51 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

நாமக்கல், ஜூன் 15: நாமக்கல்லில் கந்துவட்டி புகாா் காரணமாக நில விற்பனையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையம் எம்.ஜி.பி. நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (59). இவா், நில விற்பனை, வீடுகள் கட்டுமானம் மற்றும் பணம் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தாா். அவரிடம் நாமக்கல் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பெண்கள் சிலா் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனா்.

அவா்களிடம் இருந்து ஆதாா் அட்டை, பத்திரத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டு கிருஷ்ணமூா்த்தி கடன் கொடுத்துள்ளாா். ஆனால் கடன் தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்தினாலும், இன்னும் பாக்கித்தொகை செலுத்த வேண்டியது உள்ளது என்றும், அவ்வாறு செலுத்தவில்லையெனில் தனது விருப்பத்துக்கு இணங்க வேண்டும் என்றும் அவா் கூறிவந்ததாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இதனால் கவலையடைந்த பெண்கள் சிலா், நாமக்கல் காவல் நிலையத்தில் கிருஷ்ணமூா்த்தி மீது புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.