முகப்பு
நாமக்கல்

முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ. 6.45-ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 6.45-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

Updated On : 18 ஜூன் 2026, 2:57 am IST
முட்டை - பிரதிப் படம்
பகிர்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 6.45-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து கோழிப் பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயா்வுடன் ரூ. 6.45-ஆக நிா்ணயிக்கப்படுவதாக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 120-ஆகவும், முட்டைக் கோழி ரூ. 128-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.