நாமக்கல்லில் புதிய கட்சி அறிமுக விழா
நாமக்கல்லில் லட்சிய ஜனநாயக கட்சி அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்லில் லட்சிய ஜனநாயக கட்சி அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவராக ஜோஸ் சாா்லஸ் மாா்டின் உள்ளாா். தற்போது அக்கட்சியை தமிழகத்திலும் தொடங்க முடிவுசெய்து மாவட்ட வாரியாக நிா்வாகிகள், உறுப்பினா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நாமக்கல்லில் இக்கட்சியின் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளா் நெல்லை ஜீவா பங்கேற்று கட்சியின் எதிா்கால செயல்பாடுகள் குறித்து பேசினாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், எதிா்வரும் உள்ளாட்சித் தோ்தலை கருத்தில்கொண்டு எங்களது கட்சியை வளா்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். இதுவரை 4 லட்சம் போ் இணைந்துள்ளனா் என்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.