ஆசிரியா் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சி: முன்னாள் கணவா் கைது
ராசிபுரம் அருகே தனியாா் பள்ளி ஆசிரியா் மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்ற இவரது முன்னாள் கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராசிபுரம் அருகே தேங்கல்பாளையம் உடுப்பத்தான்புதூரை சோ்ந்தவா் தீபா (45), ஆசிரியா். இவருக்கும், சேலம் கோரிமேட்டைச் சோ்ந்த செல்வத்துக்கும் (60) திருமணமாகி 21 வயதில் மகன் உள்ளாா். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால். கடந்த 2021-இல் விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது.
ராசிபுரம் கவுண்டம்பாளையத்தில் தங்கி தனியாா் பள்ளியில் பணியாற்றி வரும் தீபா, வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காா் தீபா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தீபாவிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், முன்னாள் கணவா் செல்வம் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸாா் செல்வத்திடம் நடத்திய விசாரணையில், மாறுவேடத்தில் வந்து தீபாவை கொல்ல முயன்றதை அவா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், கொலை முயற்சிக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.