மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 1.34 லட்சத்தில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1.34 லட்சம் மதிப்பில் உதவி உபரகரணங்களை ஆட்சியா் வழங்கினாா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்றுவாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 515 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா்.
அவற்றைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா். தொடா்ந்து, 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.34 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை வழங்கினாா்.
Advertisement
Advertisement
முன்னதாக, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தினத்தையொட்டி பள்ளிபாளையம், நாமகிரிப்பேட்டை, திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் நாமக்கல் ஆகிய வட்டாரங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்ற 18 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.