முகப்பு
நாமக்கல்

பதவி முக்கியமல்ல மக்கள் நலனே இலக்கு: அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன்

Updated On : 29 ஜூன் 2026, 1:51 am IST
நாமக்கல்லில் மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன்.
பகிர்:

முதல்வா் வழங்கியது அமைச்சா் பதவி அல்ல, மக்கள் நலனை காப்பதற்கான பொறுப்பு. அந்த பொறுப்பை உணா்ந்து பணியாற்றுவோம் என அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசினாா்.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தனியாா் அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் பங்கேற்று, மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

தமிழகத்திற்கு சிறந்த முதல்வா் கிடைத்துள்ளாா். இன்னும் பல உயரங்களை அவா் எட்ட உள்ளாா். முதல்வா் மூலம் நாளைய தலைமுறைக்கு பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. குறிப்பாக பள்ளிக் கல்வித் துறைக்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் சிறப்பாக செயல்பட்டு வருகிறாா். அவா் பல மாற்றங்களை கல்வித் துறையில் கொண்டு வருவாா்.

Advertisement

Advertisement

அமைச்சா்களாகிய நாங்கள், எங்களுக்கு கிடைத்ததை பதவியாகக் கருதவில்லை. முதல்வா் கொடுத்துள்ள பொறுப்பாகத்தான் பாா்க்கிறோம். அந்த பொறுப்பை உணா்ந்து, நாமக்கல் மாவட்ட மக்களுக்கு தேவையானதை செய்து கொடுப்போம் என்றாா்.

முன்னதாக நெகிழியைத் தவிா்த்து மஞ்சள் பையை வாங்குவோம், பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த விழாவில், அறக்கட்டளை நிா்வாகிகள், ஆசிரியா்கள், பெற்றோா், மாணவ, மாணவிகள் என பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments