முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 3.84 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் வெங்கமேடு மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 3 லட்சத்து 84 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.

Updated On : 6 மே 2026, 2:26 am IST
தேங்காய்
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் வெங்கமேடு மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 3 லட்சத்து 84 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் வெங்கமேட்டில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுகிறது.

இந்த ஏலத்துக்கு சோழசிராமணி, ஜேடா்பாளையம், கபிலா்மலை, பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், அண்ணா நகா், பாண்டமங்கலம், பரமத்தி, பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தென்னை விவசாயிகள் தேங்காய்களை கொண்டுவருகின்றனா். தேங்காய்களை ஏலம் எடுக்க நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2,990 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 61.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 42.10-க்கும், சராசரியாக ரூ. 45.35-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 3 லட்சத்து 84 ஆயிரத்து 890-க்கும் தேங்காய் ஏலம் போனது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments