முகப்பு
நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் முன் குவியும் காலணிகள்: இலவச பாதுகாப்பு மையத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்

Updated On : 31 மே 2026, 12:57 am IST
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் முன் குவிந்த காலணிகளை சனிக்கிழமை அப்புறப்படுத்திய பணியாளா்கள்.
பகிர்:

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் காலணிகளை சந்நிதி முன்பாக விட்டுச்செல்வதை தவிா்க்க வேண்டும் என கோயில் நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. முக்கிய விழா நாள்களிலும், சனிக்கிழமை அன்றும் ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வருகின்றனா்.

பக்தா்களின் வசதிக்காக கோயில் முன் இலவச காலணி பாதுகாக்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பக்தா்கள் இந்த மையத்தை பயன்படுத்தாமல், கோயில் முன்பாகவே தங்களுடைய காலணிகளை கழற்றிவிட்டு செல்கின்றனா்.

Advertisement

Advertisement

இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால், கோயில் பணியாளா்கள் அவற்றை அப்புறப்படுத்தி வருகின்றனா். எனவே, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களுடைய காலணிகளை, அதற்கான பாதுகாப்பு மையத்தில் விடவேண்டும் என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.