முகப்பு
சேலம்

சேலத்தில் இந்திய கம்யூ. ரயில் மறியல் போராட்டம்: 119 பேர் கைது

சேலத்தில் ரயில் மறியல் செய்ய முயன்றதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 119 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 7:09 am IST
பகிர்:

சேலத்தில் ரயில் மறியல் செய்ய முயன்றதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 119 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சேலம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை காலை பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மோகன் தலைமையில், நிர்வாகிகள் ஜீவானந்தம்,  ராமன், பரமசிவம் உள்ளிட்டோர் தபால் நிலையம் முன் திரண்டனர். பின்னர் ஊர்வலமாகத் திரண்டு ரயில் நிலையம் நோக்கிச் சென்றனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களை நுழைவுவாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து நுழைவுவாயில் முன் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 119 பேரை போலீஸார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
திமுகவினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட், இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
அதேபோல அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா தலைமை வகித்தார். இதில் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி,  முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், நிர்வாகிகள் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments